அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

கிரகணங்கள் இறைவனின் மாபெரும் அத்தாட்சி

ஹஸ்ரத் முஹையுதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

இந்துக்கள் மற்றும் தமிழர்களுக்கு மத்தியில், குறிப்பாக நாளைய தினமான 3-11-2013 ஞாயிறு அன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து அதிகமான அனுமானங்களும் ஊகங்களும்

நபி (ஸல்) அவர்களது உம்மத்தின் சிறப்பு!

ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

“இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறை அறிவிப்பைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை, உண்மையான மார்க்கமாகிய இஸ்லாத்தில் - உம்மத்தே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கே அவன்

உங்கள் காலத்தில் தோன்றும் நபிமார்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவரகள் போதிக்கின்றார்கள்.

அல்லாஹ் சமூது சமுதாயத்தை ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டு, அவர்கள் தமது இயல்பிலேயே காணப்பட்ட வரம்பு மீறும் பண்பின் காரணத்தால் தமது காலத்தின் நபியைப் பொய்ப்படுத்தினர் எனக் கூறுகின்றான். மேலும் அவரைப்

தவறான ஷைத்தானிடம் தூண்டுதலில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு!

ஹஸ்ரத்  கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

ஆகவே, மனித குலமே, எனது முஸ்லீம் சகோதரர்களே சகோதரிகளே, அன்புக்குரிய குழந்தைகளே! இன்னும் உலகெங்கிலும் உள்ள எனது ஸஹாபிகளே! அனைவரும்

நேர்வழி பெறுபவர் யார்?

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) கூறுகின்றார்கள் :-

“ஓர் இறை தூதர், நபி, முஹத்தஸ் படைப்பினங்களின் சீர்திருத்தத்திற்காக வானத்திலிருந்து இறங்கும் போது அவருடன் கண்டிப்பாக வானவர்கள் இறங்குகின்றனர். அவர்கள் நல்ல உள்ளங்களில் நேர்வழியை இட்டுச்

இறைவஹீ இல்லையென்றால் இறைவன் உங்களிடம் உரையடாவில்லை என்றால் அதுவும் ஒருவகை சிலை வழிபாடே!

ஹஸ்ரத் மவ்லானா ஹக்கீம் நூருத்தீன் (ரலி) (முதலாவது கலீபஃதுல் மஸீஹ்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள் :-

அல்லாஹ் ஸுபுஹானஹு தஆலா முற்காலத்தில் தனது நேசர்களிடமும் தூதர்களிடமும் பேசியதைப் போன்று இப்போதும் எப்போதும் தான் விரும்பியவர்களுடன் உரையாடுகின்றான்.

இறைவா! உனது அருள் கிடைத்தவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக!

என்ற வேண்டுதலை இறைவனே கற்றுத் தந்துள்ளான். அதாவது, நபி, சித்தீக், ஷஹீத், மற்றும் ஸாலீஹீன் ஆகியோர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக என்பதாகும். இறைவன் உரையாடுவது என்பது அந்த வழியை சேர்ந்ததே ஆகும்.

இஸ்ரவேலர்கள் (மூசா நபியுடைய காலத்தில்) கன்றுகுட்டியை வணங்கி வந்தார்கள் இதனை கண்டிக்கும் வகையில் அவர்கள் வணங்கக் கூடியவை அவர்களிடம் உரையாடுவதில்லை; அவர்களுக்கு நேர்வழி காட்டுவதும் இல்லை என்று இறைவன் கூறுகின்றான்.

இவ்வாறிருக்க இறைவன் பேசுகின்றான் என்பதை முஸ்லிம்கள் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள்? (மிர்க காத்துல் யக்கீன் 24-27)

அப்போது அன்னார் முஸ்லீம்களை பார்த்து கேட்டதை இன்று அஹ்மதிகளை பார்த்து கேட்பது போன்று உள்ளது. அல்லாஹு அக்பர். உடனே மௌலவிகள் கூறும் அடிப்படை ஆதாரம் இல்லாத வாதத்தை அதாவது வஹீ வரும் அதை சொல்லமாட்டார் என்று உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளாதீர்கள் சகோதரர்களே!

இறைவன் உங்களுடன் வஹியின் மூலம் பேசுவது என்பது மார்க்கத்தின் ஆணிவேர் அதை சில சாக்கு போக்கு கூறி மறுப்பதும் சாமிரி செய்த சிலையை வணங்குவதற்கு ஒப்பாகும். (நஊதுபில்லாஹ்)

ஒன்று வஹீயை கேளுங்கள் மஸீஹ் (அலை) மிக தெளிவாக ரூஹுல் குத்தூஸ் இல்லாமல் உங்களுக்கு இறையச்சம் வராது என்று எச்சரித்துள்ளார்கள். (அல்ஹம்துலில்லாஹ்) சிந்தியுங்கள் சகோதரர்களே!!

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் அவர்கள்

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

நமது ஜமாத்தை (ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) சேர்ந்த மக்கள் எப்போதும் இந்த அருளின் பக்கம் நினைவு கூற்ந்தவர்களாக இந்த தியாகத்தின் அருள்களையும் பயன்களையும் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எனது சகோதரர்களே நமது மறைவானவற்றை அவனை தவிர யார் அறிந்து கொள்ள முடியும்! எனவே நாம் இந்த தியாகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற முழு விழிப்புணர்வு மற்றும் உண்மையான உணர்வும் நம்மிடையே உருவாக வேண்டும். நாம் உளப்பூர்வமாக நல்ல எண்ணத்தில் இந்த தியாகத்தில் ஈடுபடுத்திக் கொண்டால் அந்த ஏக இறைவனின் அருளுக்கும் அன்பிற்கும் பாத்திரமாகலாம். இதை சொற்களால் கூறுவது கடினமான விஷயமாகும். இன்னும் சில வேளைகளில் மக்கள் பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கும்போது நம்மை சிலர் தொந்தரவு செய்வதிலிருந்து தவிர்க்க அல்லது குழந்தைகள் அடம்பிடிப்பதை நிறுத்தும் நோக்குடன் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுப்பது போல பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கின்றனர், ஆனால், எனது அன்புக்குரியவர்களே! நீங்கள் பிறருக்கு கொடுக்கும் போது கூட மகிச்சியுடனும் உங்கள் இதயத்தை உருக செய்யும் மன உருக்கத்துடனும் மனநிறைவுடன் இந்த உலகம் நமக்கு தற்காலிகமானது என்றும் நமக்கு நிரந்தரமான மறுமை உள்ளது என்ற உண்மையை முழுவதும் உணர்ந்தவராக கொடுங்கள். இது உங்கள் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் இதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டு ஆத்மார்த்தமாக இறைவனுக்காக இவ்வகை நற்செயல்களை செய்தால் அந்த ஏக இறைவாகிய அல்லாஹ் சுபஹானஹு தாலா அதற்கு பகரமாக அந்த அடியானை அவனது தயவாளும் கருணையாலும் சிறந்த முறையில் பொருந்தி கொள்வான். அந்த வானங்களையும் பூமியையும் உங்களை படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர உங்களை நேசிப்பவன் யார்? இன்னும் அவன் எப்படிபட்டவன் என்றால் அனைத்தும் அழிந்தாலும் அவன் ஒருவனே நம்முடன் என்றென்றும் இருப்பான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனது அருமையானவர்களே!.
இஸ்லாம் ((ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) என்ற இந்த உடல் ரூஹுல் குத்தூஸினாலும் உங்கள் அனைவரின் தியாகங்களாலும் ஒளிரூட்டப்பட்டு அந்த ஒளியூட்டப்பட்ட ஒளி பாய்ந்து வெளிச்சத்தை பரப்பும் போது அதன் முன்னேற்றத்தை எவராலும் தடுக்கமுடியாது இவ்வாறு செய்வதற்கு அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் நமக்கு உதவிபுரிவனாக! ஆமீன் சும்ம அமீன் யா ரப்புல் ஆலமீன்!!