அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

அந்-நஜாத்தும் புரோகிதமே !

O.M. முஸ்ஸம்மில் அஹ்மத்  H.A

ஹஸ்ரத் ஈஸா (அலை) 2000 ஆண்டுகளாக பௌதீக உடலுடன் வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள். அதே ஈஸா நபியே மீண்டும் இந்த உலகிற்கு இறங்கிவருவார் என்ற புரோகிதக் கொள்கையை திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து நிரூபிக்க முடியுமா? என்று மௌலவி P.M. முஹம்மது அலி H.A அவர்கள் கேட்டிருந்த கேள்விக்கு அந்நஜாத் மே2011 இதழில் கொடுத்த பதிலை திருக்குர்ஆன் ஹதீஸ்களின் ஒளியில் அலசி ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கம்.

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை.

இயேசுவின் இரண்டாவது வருகை எவ்வாறு நிகழும்!

இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அடையாளங்களுக்கு முற்றிலும் முரணானவற்றில் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கிற கிருஸ்தவர்கள், மனுஷ குமாரன் (கிருஸ்தவகளின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து) வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்திலுள்ள மேகங்களின் மேல் வந்திறங்குவார் என்றும், அப்போது பூமியிலுள்ளோர் யாவரும்அவரைக் கண்டு புலம்புவார்கள் என்றும், வேதாகமத்திலுள்ள சொற்களுக்கு மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டு பெரிய தவறிழைத்து வருகிறார்கள்.

கிருஸ்தவ சகோதரர்கள் பிரச்சாரம் செய்வதுபோல் மிகுந்த எக்காளத்தோடும்,